திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட தமிழ்நாடுஅரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தினர் மண்டல இணைபதிவாளர் நடவடிக்கையை கண்டித்து கோசமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாககூட்டுறவு துறை அலுவலகத்தில் மூன்று மாதம் பணிபுரியும் ஊழியரை திருவாரூர் மண்டல இணைபதிவாளர் தன்னிச்சையாககாரணமின்றி பணியிட மாற்றம்செய்ததை தவறாக நடவடிக்கை மேற்கொண்டதாக கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி பணியிடம் மாற்றுதலை ரத்து செய்யாததால் ஆர்ப்பாட்டம் நடத்தினர் , இதனால் ஊழியரின் பணியிட மாறுதலை ரத்து செய்யக்கோரியும் ,அரசாணை 10 க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டித்தும் , ஐந்து ஆண்டுகளாக ஒரேமண்டலத்தில் பணி புரியும் இணைப்பதிவாளரை மாற்ற வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்துள்ளனர் .இந்த ஆர்ப்பாட்டமானது கூட்டுறவுத்துறை சங்கத்தின் மாவட்டத்தலைவர் ரவிராசு தலைமையில் மாநில பொருளாளர் விஜயன் , மாவட்டச்செயலாளர் ஐயப்பன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் , வட்டகிளை நிர்வாகிகள் தம்பிதுரை , குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

No comments:
Post a Comment